Friday, April 14, 2006

ஆசையுண்டு பாசமுண்டு

காத்திருக்கும் காகிதங்கள் நூற்றுக்கணக்கினையும் -உணர்ச்சிகாய்த்திருக்கும் காவியமாய் மாற்றிவிட ஆசையுண்டு
ஊனமுற்ற அனைவருக்கும் ஊன்றுகோலாய் உடன் இருக்க உள்ளத்தின் மத்தியிலே ஓயாத ஆசையுண்டு
பசி பசி என வந்தோர்க்கெல்லாம் புசிபுசி என உணவளித்து பணம் என்னும் அழிப்பானல் ஏழ்-மை அழிக்க ஆசையுண்டு
தொலைந்த வாழ்க்கையை தீப் பெட்டிகளில் தேடும் சிறார்க்குதொலைதூர வாழ்க்கையை தேடித்தர ஆசையுண்டு
ஊதியத்தில் பாதியை உண்டியலில் செலவழிக்கும் உத்தம புத்திரர்க்கு உதவியே இறைவன் என உணர்த்திவிட ஆசையுண்டு
காதலிலே கசிவுற்ற காளையர்கள் அனைவருக்கும்வாழ்தலிலே ஈடுபாட்டை கொண்டுவர ஆசையுண்டு
இருளடைந்து போன அனாதை சிறாரின் வாழ்க்கைக்கு ஒளி தீபம் ஏற்றிவைத்து உடனிருக்க ஆசையுண்டு
முதியோர் இல்லங்களின் முற்படுக்கையில் உறங்கும் முதியோர்கள் அனைவரிடம் முத்தம் வாங்க ஆசையுண்டு
படிக்காத பதினைவர் சுற்றத்தில் அமர்ந்திருக்க நிஜம் கக்கும் நாளிதழை படித்து சொல்ல ஆசையுண்டு
படபடக்கும் வெய்யிலிலே நடுநடுங்கும் கரங்களுடன் கல்லுடைக்கும் மாதருடன் கலந்து பாட ஆசையுண்டு
ஊரெங்கும் காவல் நிலையம் ஒழியும் வரை காத்திருந்து சட்டம் ஒழுங்கு நிலைநாட்ட சத்தியமாய் ஆசையுண்டு
மானத்தை பேரம் பேசும் விலைமாதர் அனைவருக்கும் அறிவுரையாய் என் கவிதை மாறிவிட ஆசையுண்டு
தூக்கத்தில் துவண்டு வரும் தினக்கூலி மாந்தருடன் ஒரு பொழுது கஞ்சி பகிர்ந்துண்ண ஆசையுண்டு
வீதிகளில் கையேந்தும் முகமரியா நண்பர்களை நட்சத்திர உணவகத்தில் அமரவைக்க ஆசையுண்டு
மேல் குரித்த ஆசைகள் நூற்றில் ஒரு பங்கு இதில் ஒன்றேனும் 'அனுபவம்' ஆனால் மகிழ்ச்சி நூறு மடங்கு

1 Comments:

Blogger Yesgee said...

machi, your poetic skill are known, but your tamil (choice of words) has improved!

10:42 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home