Saturday, April 22, 2006

கூசுது

தைமாசம் உன்ன நம்பி
படயல் போட்டதில்லையா
நன்றிகடன் இமி இல்லாம எங்கள
கசக்கி புழிவ தென்னயா?

எங்க குடும்ப அட்டயில் கடசி பேர் என்
இடுப்பில் நொந்து கடக்குது
என் கண்ணபோல வத்திப்
போனகாம்பு புடிச்சு இழுக்குது

சாமியா என்ன நம்பி சோறு
கேக்கும் அவங்கிட்ட
சாமிக்கும் பசிக்குதுன்னு என்ன
சொல்லி புறிய வெப்பன்...

மூத்தவன் இளயவள்ளுன்னு என்ன நம்பி
நாலு பேரு
தினமும் நான் தூக்கற அறநூறு செங்கல் தான்
எங்க சோறு

கள்ளிப் படுக்கயில படுத்தெழுந்து
வர்ரவளுக்கு - கால்ல
சின்ன கல்லு பட்டா வலிக்கல
கூசுது

தலையில செங்கல் குத்தி கோத்த சீய
பத்தி சொல்லட்டா
இல்ல வருசக்கணக்கா பூவிழுந்த கண்ண
பத்தி சொல்லட்டா

அறவ மெஷின் அறுத்துப் போன சுண்டு வெரலப்
பத்தி சொல்லட்டா
இல்ல கை காச்சு போயி அழிஞ்ச அதிஷ்ட
ரேகைய நான் தேடட்டா ?

வயித்த கூட கழுவ வக்கில்லாத நம்மல்லாம்
வயிற நறப்பிக்கரது அசட்டு தெய்ரியம் தான்

அதனால...

புள்ள குட்டி போதுமுன்னு நேத்து பன்னிக்கிட்ட ஆபரேஷன்
செங்கல்ல அள்ளிக் கொட்டி நிமிரும் போது
முள்ளா குத்தி
கூசுது...

1 Comments:

Blogger gokee said...

நிஜமாகவே கண்ணீர் கோர்க்கின்றது.
தலைப்பில் இன்னும் கொஞ்சம் அக்கறை தேவை.

10:24 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home