Monday, September 29, 2008

தாமதத்திற்கு மன்னிக்கவும் ...

பாகம் 1
பாகம் 2

முதல் முதல் முதல் வரை ... (M3V படம் அல்ல...)

இந்த காலேஜை பற்றி முதலில் கேள்விப்பட்ட போது, "ஹாச்டல்ல எல்லா பசங்களும் சந்தி பண்ணிக்கிட்டு இருப்பாங்க" அப்படி பட்ட காலேஜ் என்றெல்லாம் சொன்னார்கள். நானும் அந்த கால கட்டத்தில் சந்தி எல்லாம் ரெகுலரா பண்ணிக்கிட்டு இருந்ததால வெடி கார்த்தால எழுந்து பட்ட கிட்ட எல்லாம் போட்டுக்கிட்டு பஞ்ச பத்திரத்தை எடுத்துக்கிட்டு காரிடார்ல சந்தி பண்ண உட்கார்ந்துட்டேன். அப்பறம் புதுசா வாங்கின சொக்கா முழுக்கால் டவுசர் சுடர்மணி உள்ளாடைகள்னு எல்லாத்தையும் போட்டுக்கிட்டு டிப் டாப்ஆ எல்லாரும் ரெடி ஆனோம். மேச்சுக்கு போய் கல்லு கல்லா இருந்த மெகா சைஸ் இட்லிகளை ஒரு கட்டு கட்டிவிட்டு 8:40 காலேஜுக்கு ஏழே முக்கலுக்கே போய் ஆஜர் அயிடோம்.

1st இயரில் டிபார்ட்மென்ட் வைஸ் கிளாஸ் இருக்காது, எல்லாரும் அச்சார்டடா ஒரு ஒரு செக்ஷன் ல இருப்பாங்க. அப்படி செக்ஷன் பிரிச்சதுல என்ன "b" செக்ஷன் ல போட்டாங்க, அருணும் அதே செக்ஷன் செக்ஷன் ல தான் இருந்தான், சோ நாங்க ரெண்டு பேரும் மிடில் ரோ ல லாச்டுக்கும் முன்னாடி பெஞ்சை புடிச்சோம்.. ஆக்சுவலி அகொச்டிக்ஸ், மற்றும் காற்று வாட்டம், fan , மறைவான இடம் போன்ற பல மேட்டர்களை கன்சிடர் பண்ணி அருண் அந்த இடத்தை தேர்ந்தேடுதன். அப்பறம் ஒருத்தர் ஒருத்தரா வர ஆரம்பிச்சாங்க, கூட்டம் கூட்டமா நின்னு பேசிக்கிட்டு இருந்தாங்க.. அருண் இந்த கப்ல யார் யார் எல்லாம் ஹச்டல்லேந்து வராங்க எந்த ரூம்ன்னு டாடாபேசை அப்டேட் பண்ணிக்கிட்டு இருந்தான். அங்கு ஹோச்டலில் பார்த்த ஒரு ரெண்டு முகங்களும் தென் பட்டன. முதல் அவருக்கு PV என்று ஒரு இங்கிலிபீஸ் பேராசிரியை வந்தாங்க. முதல் கோணல் முற்றும் கொனல்லுங்கர மாதிரி மொதல் வகுப்பே நம்ம வீக் சுப்ஜெக்டுல ஆரம்பிச்சுது. அந்த மேடம் வந்து அவங்கள பத்தியும், காலேஜை பத்தியும் தஸ்ஸு புஸ்ஸுன்னு சொல்லி முடிக்க, அடுத்து, நீண்ட நேரமா நான் பயந்து கிட்டு இருந்த இன்ட்ரோடேக்ஷன் வந்துது, ஊர் பேரு மட்டும் கேட்டுட்டு விட்டுடுவாங்கன்னு நினைச்சா, எல்லாரையும் ஒருத்தர் ஒருத்தரா வந்து இன்ட்ரோடேக்ஷன்னோடு ஏதாவது பேசவும் சொல்லிடாங்க.. ஸ்கூல்ல இங்கிலீஷ் நான்-டீடைல் கிளாஸ் ல எல்லாரையும் ஒன் பை ஒன் பூக்லேந்து படிக்க சொல்லும் போது நான், எப்படா பெல் அடிக்கும், ஒருத்தர் 3 நிமிஷம் படிச்சாங்கன்னா இன்னும் எவ்ளோ பெருக்கப்பரம் நம்ம டர்ன் வரும், அதுக்குள்ள பெல் அடிச்சுடுமா என்று கல்குலேத் பண்ணியதெல்லாம் நினைவுக்கு வந்தது.. அந்த வயிற்றில் புளி கரைக்கும் எபெக்டுடன் நான் அமர்ந்து கொண்டிருந்தேன். எல்லா பசங்களும் நீ போ நான் போ என்று குசு குசு என்று பேசிகொண்டிருந்த போது. இதெல்லாம் ஒரு பெரிய மட்டேரா என்கிராற்போல் ஒருவன் ஸ்டேஜ் மேலே ஏறினான். அவன் கிளாசுக்கு வந்ததே லேட்டு அப்பறமும் அவன் நடவடிக்கை எல்லாம் நோட் பண்ணும் போது பெரிய இவன் மாதிரி இருந்தான்..

ஸ்டேஜ் மேலே ஏறி நின்று.. " iam balakrishnan" blah blah blah என்று அங்கங்கே மட்டும் புரிகிறாற்போல் இங்கிலிபீஸில் புகுந்து விளையாடினான்.. எனக்கு புரிந்த கொஞ்சத்தையும், அருணுக்கு புரிந்த மிச்சத்தையும் வைத்து பார்த்ததில், அவன் DAV கோபாலபுரத்தில் +2 படித்ததாக தெரிந்தது.. அவன் பேசும் போது "எங்க ஸ்கூல் ல எல்லாம் யார பார்த்தாலும் ரெண்டு கையையும் கூப்பி நமஸ்தே என்று பணிவோடு சொல்லுவோம், நாங்க எந்த எடத்துக்கு போனாலும் இந்த கில்ச்சரை ஸ்பிரெட் பண்ணுவோம், இனிமே நம்ம எல்லாரும் இப்படி தான் கிரீட் பண்ணிக்கணும் " அப்படி இப்படி என்று அளந்து விட்டுக்கொண்டு இருந்தான். இவனோட பேச்செல்லாம் பார்த்தால் (வடிவேலு சொல்வதை போல்) "இவன் ரொம்ப நல்லவன் போல இருக்கே" என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.

இவன் பேசிய ஸ்டைலையும் ஆக்சென்டையும் பார்த்தவுடன், என் வயிற்றில் ஒரு 100 கிராம் புளி எக்ஸ்ட்ரா வாக கரைய ஆரம்பித்தது. அப்படி இப்படி எல்லாரும் ஒருத்தர் ஒருத்தரா பேசிக்கிட்டே வந்தாங்க.. நம்ம அருண் பயலும் சட்டுனு எழுந்து போய் எதோ சொல்லிட்டு வந்துட்டான். சரி பெல்லடிகரதுக்கு ரொம்ப நாழி இருக்கு நிச்சயம் மாட்டிக்கொள்வோம் என்று தீர்மானித்தவுடன் , என்ன சொல்ல போறேன் என்பதை யோசித்து கொண்டு ஓரிரு முறை ரிகர்சலும் செய்து பார்த்தேன். பின் எழுந்து போய் ஸ்டேஜில் நின்றால்.. ஒரு 32 பேர் கொண்ட கும்பல் என்னை உற்று நோக்கிக் கொண்டு இருந்தது. ஹும்ம்ம் பட பட வென்று "india is my contry all indians are my brothers and sisters" என்று எனக்கு தெரிந்த இங்கிலிபீஸில் எதையோ சொல்லிவிட்டு, ஓடிவந்து எனது பெஞ்சில் அமர்ந்து கொண்டேன். ஒரு வழியாக அந்த கிளாஸ் முடிந்தது. எங்களுடன் அந்த பெஞ்சில் balakrishnanum(dav gopalaburam) ஞானாவும் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். மூணு பேர் உட்காரும் பெஞ்சாக இருந்தாலும், எப்படியோ அடிச்சு புடிச்சு நாலு பேர் உட்கார்ந்திருந்தோம், காலம் தான் எங்கள் நால்வரையும்அன்று ஒன்று சேர்த்தது, நாங்கள் நால்வரும் அடுத்த ஒரு வருடம் அந்த b செக்ஷனில் என்ன பாடு படப்போரோம்ன்னோ இல்ல என்ன பாடு படுத்தபோர்ரோம்ன்னோ எங்களுக்கு ஒரு க்லுவே இல்ல.

அடுத்த பதிவில் எங்கள் அட்டகாசங்கள் ஆரம்பம்..


Thursday, September 18, 2008

பாகம் 2 ... - பரமானந்த விகார்..

( பாகம் 1 ..)

இனிமே எவ்வேரி Monday ஒரு பாகம் ரிலீஸ் ஆகும்.. அடுத்த Monday நான் அவுட் ஒப் ஸ்டேஷன் ராமேஸ்வரம் போறேன் அதுனால இன்னிக்கே பாகத்த ரிலீஸ் பணிடறேன்..

அந்த 3 இன் 1 ஹச்டலின் பெயர் பரமானந்த விகார். எங்களுக்காக அந்த ஹாஸ்டலில் காத்திருந்தது பரமானந்தமா ? இல்லை விகாரமா ? என்று யோசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன். அங்கு ஒரு அழுக்கு வேஷ்டியுடன் , சட்டையில் மேல் பொத்தான்கள் இரண்டை கிழற்றி விட்டபடி ஒருவரை சந்தித்தோம். அவர்தான் அந்த ஹச்டல் வாடன் M. ஷர்மா. லார்ட்ஸ் மைதானத்தில் நெடு நெடு வென வளர்ந்திருக்கும் புற்களைப் போல, அவர் உடம்பு முழுக்க கரு கரு வென ரோமங்கள் முளைத்திருந்தன. சுருக்கமாக சொல்லப்போனால் அவர் உள்ளங்கையில் மட்டும் தன் அவர் தோலை பார்க்க முடிந்தது. அவருக்கு ஒரு மூன்றெழுத்து செல்லப் பேர் வைப்பதில் எங்களுக்கு சிரமமே இல்லை ( அதுதாம்பா 'க' ல ஆரம்பிச்சு 'டி' ல முடியுமே நடூல குஉட வெறும் 'ர' மட்டும் வருமே )

சில கையெழுத்துக்களெல்லாம் போட்ட பின் ரூம் சூஸ் செய்ய புறப்பட்டோம். அருண், ஜெயேன் இருவரும் ஏற்கனவே அங்கு சென்றுவிட்டதால் ஒரு சீட் போட்டு வேப்பாங்கன்னு பாத்தா, நம்மளை கயட்டி விட்டுட்டு இன்னொரு பய்யனோட ( ரூம் நோ. 301 ல) செட் போட்டுட்டாங்க. நானும் பல்சும் போய் ஒரு ரூமை சூஸ் பண்ணினோம் ( 329 ). அந்த ரூமில் எங்களோடு தங்க பால்சின் கசினுக்கு சீட் போட்டோம். அவன் பெயர் கு... (சாரி பிரஷாந்த்). மூன்றெழுத்து செல்ல பேரை நேரம் வரும்போது சொல்றேன். அவன் இன்னும் இரண்டு வாரம் கழித்து தன் ஹாஸ்டலுக்கு வருவதாக இருந்தான்.

அப்டி இப்டி எல்லா சாமான்களையும் `செட் ரைட்` பண்ணிட்டு, செட்டில் ஆனோம். அம்மா, அப்பா சோகத்தோடு டாட்டா சொல்லி விட்டு கிளம்பினார்கள். அவர்களை வழி அனுப்பிவிட்டு ஹாஸ்டல் நோக்கி திரும்பினேன். ஏதோ இந்த உலகத்தில் தனியாக என்னை மட்டும் விட்டு விட்டு எல்லாரும் போய் ஒளிந்து கொண்டதைப் போல் ஒரு பீலிங்க்ஸ். தெளும்பிய ஓரிரு கண்ணீர் துளிகளை அங்கேயே உதறிவிட்டு சகஜமாக ஹாஸ்டல் ரூமிற்குள் நுழைந்தேன். நம்ம பால்ஸ் எங்கிருந்தோ என் சோகத்தை ஒட்டு பார்த்துவிட்டு " ரொம்ப வருத்த படர போலிருக்கு. அழுதா மாறி இருக்கு" என்று கேட்டான். அதற்கு வருத்தமா, நானா ?? என்று ஜம்பமாய் பதிலளித்தேன். "டேய் அடங்கு நீ திரும்பி வரும் போது நான் பார்த்துகிட்டு தான் இருந்தேன் என்று சொல்லி என் வாயை அடைத்தான். ஹி ஹி ஹி என்று அசடு வழிந்து விட்டு காரிடாரில் நின்று ஹாஸ்டலை சுத்தி பார்த்தோம்.

இந்த ஹாஸ்டல் ஒரு ஹெக்சகன் போல் வடிவம் கொண்டது. இதன் ஆறு சைட்சும் ஆறு விங்க்ஸ். ஒரு தெருவுக்கு ஆறு ரூம் என்று ஒரு பிலோருக்கு 36 ரூம்கள் இருந்தன. மொத்த மூன்று பிலோர்களில் மூன்றாவது மாடியில் பஸ்ட் இயற் பசங்க மட்டும்தான் இருப்பாங்க. கீழ் ப்ளோரில் இருந்து வரும் படிக்கட்டு ஒன்று தான். மூன்றாவது மாடி ஏறியவுடன் இடது பக்கம் 318 ரூமும் வலது பக்கம் 319 ரூமும் இருக்கும். இந்த நுழைவாயிலுக்கு நேர் எதிரே அந்தப்பக்கம் தான் எங்கள் ரூம் இருந்தது. இரு வழிகளில் எந்த வழியாக வந்தாலும் எங்கள் ரூம் தன் கடைசி. கிரௌண்டு பிலோர் முழுவதும் மெஸ்ஸும் மெஸ் சார்ந்த மக்களும் தங்கி இருந்தார்கள்.

ஏற்கனவே என்னையும் பால்சையும் பார்த்துவிட்டு "இவங்க நல்ல பசங்களா இருக்காங்க இவன்கலோடையே" தங்கிக்கோ என்று சங்கர் அப்பா சொன்னதற்கு, இங்க பிரசாந்துக்கு சீட் போட்டாச்சு என்று சொல்லி விட்டோம். அதனால் அவர் சங்கரை எங்கள் பக்கத்து (330) ரூமையே சூஸ் பண்ண சொன்னார். சங்கர் யாரு ? என்ன ? பய்யன் எப்படி என்று தெரிந்து கொள்ள சும்மா அவனோட பேச்சு குடுத்தோம். பய்யன் கொஞ்சம் புத்திசாலி, ஆனா ரொம்ப அணிமேட்டடா நடந்து கொண்டான். அவனிடம் போசும் போது ஒரு கார்டூன் கேரக்டரிடம் பேசிய அனுவம் போல் இருந்தது. திருநல்வேலியில் ஒரு கிராமத்தில் +2 முடித்திருந்தான். அவன் +2 ல எல்லா சப்ஜெக்ட்களையும் கடம் போட்ட கதைகளும், தாமிரபரணியில் அவன் துள்ளி குதித்து நீச்சலடித்த கதைகளும் என் மனதை கவர்ந்தன. அவன் சொல்வதையும் பேசுவதையும் வைத்து அவன் ஒரு பயங்கர `ஹர்ட் வோர்கேர்` என்று புரிந்தது.

அப்படியே அருண் ஜெயேன் ரூம் 301 க்கு சென்றோம். அங்கு சென்று ஏன் எனக்கு சீட் போடலை என்று பட்டும் படாமலுமாய் வினவி, அவர்கள் கொடுத்த விளக்கத்தையும் கேட்டுக் கொண்டேன். அங்கு அவர்களின் ரூம் மேட் வினோத்தையும் சந்தித்தோம். ரொம்ப மேன்மையானவன் அவன் பஞ்சு என்றால் அவன் தந்தை பூ. பேச்சில் இருவருக்கும் ஒரு நிதானமும், தன்மையும் இருந்தது.

மணி 7 ஆகும் வரை கதைகளெல்லாம் பேசி விட்டு, மெஸ்க்கு சாப்பிட போக தயாரானோம். அன்று மெஸ்சில் என்ன மெனு என்று ஞாபகம் இல்லை. பெரிய தட்டு, சாப்பாட்டிற்கு க்யூ , டிரை சைக்கிளில் வைத்திருந்த ஒரு பெரிய அடுக்கு முழுக்க தயிர் சாதம் எல்லாம் சேர்ந்து ஒரு ஜெயில் எப்பெக்ட் கொடுத்துக் கொண்டு இருந்தன. பொதுவாக நாய்களையோ ( மற்ற பிராணிகளையோ) நாம் கண்ணோடு கண் பார்த்தால் வள் என்று குறைக்கும். அது தன்னை இவன் செலேஞ்சு செய்கிறான் என்று நினைத்துக்கொள்ளும் என்று அறுவியல் ஆய்வு சொல்கிறது. அதுபோல ஃப்ரெஸ்ஹெராக நாங்கள் முதல் முதலில் கற்றுக் கொண்டது "நிலம் பார்த்த நடை". சுற்றி முற்றி தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர், அறியாதவர் யாரிருந்தலும், யாரையும் கண்டுகொள்ளாமல் நிலத்தை மட்டும் பார்த்து நடப்பது. அப்படித் தப்பித்தவறி நிமிர்ந்தாலும் யாரையும் கண்ணோடு கண் மட்டும் பார்த்து விடக்கூடாது. அடுத்த வினாடியே தட்டை எடுத்துக்கொண்டு அவன் டேபுளுக்கு நம்மை வர சொல்லி விடுவான் அந்த சீனியர்.

சாப்பாடு முடிந்து, யாரிடமும் மாட்டாமல் ரூமுக்கு திரிம்பினோம். அப்போது எங்கள் ரூமில் பீப் பீப் என்று தொடர்ந்து சத்தம் வந்து கொண்டே இருந்தது, என்ன சத்தம் என்று எங்களால் கணிக்கவே முடியவில்லை, என்னவோ எதோ என்று சற்று பதறியே போனோம். ஒரு ஒரு பையாக தேடித்தேடி கடைசியில் ஒரு பிரவுன் பையில் இருந்து அந்த சத்தம் வருவதை கண்டு பிடித்தோம். "டேய் பால்ஸ் இது உன்னுது தானே" என்று கேட்டதற்கு. இந்தப் திங்க்ஸ் எல்லாம் பிரஷாந்தோடது. ஆனா நான் தான் எடுத்து கிட்டு வந்தேன் என்றான். பூட்டி இருந்த பேகுக்கு சாவியும் அவனிடத்தில் இல்லை. உன் கசின்னு சொன்ன பெரிய டெரெரிச்டா இருப்பான் போல இருக்கு, டைம் பாம் சவுண்டெல்லாம் வருது என்று சொல்லி சிரித்துக்கொண்டோம். கடைசியில் அந்த பையை நகத்தி ஒருட்டியத்தில் சத்தம் நின்றது. ஆனால் 5 நிமிடங்கள் கழித்து சத்தம் மறுபடியும் ஆரம்பித்தவுடன் தான் அது அலாரம் டைம்பீஸ், நம்ம பையா திருப்பும்போது ச்நூஸ் பட்டனை அமித்தி இருக்கோம்னு ஸ்டிரைக் ஆச்சு. பின்பு மெல்ல அந்த பையின் ஜிப்பை விலக்கி இரு விரல்கள் போகும் அளவுக்கு கேப் ரெடி பண்ணி பாமை difuse செய்தோம். பின் கீழே சென்று கேனிலிருந்து பால் பிடித்துக் குடித்து விட்டு 9 மணிக்கு முன்னரே கட்டையை சாய்த்து விட்டோம். நாளைக்கு வேற முதல் நாள் காலேஜ் போகணுமே ....

பயணம் தொடரும்...



Labels:

Sunday, September 14, 2008

ஷன்முகபுரம்


அய்யா டுபுக்கின் பிலாகை படிக்கும் போதெல்லாம், எனது வாழ்க்கையில் நடந்த சில வேடிக்கையான நிகழ்ச்சிகளை தொகுக்க வேண்டும் என்று ஒரு ஆற்வம் என்னுள் தோன்றி மறையும். இந்த போஸ்ட்டின் மூலம் அந்த தொகுப்பை தொடங்க முனைகிறேன்.

பத்தாவது முடித்து, வெகேஷனில் ஊருக்கு சென்றிருந்த போது, அடுத்தது என்னடா படிக்கபோர என்று எல்லோரும் கேட்டதுக்கு பெக்க பெக்க என்று தேவாங்கு போல் முழித்தேன், +1 க்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் எடுத்துக்கோ அப்பறம் இன்ஜினியரிங் ஜோஇன் பண்ணு என்று என் வாழ்க்கைக்கு திசை கட்டியது என் பெரிய மன்னி தான். பட பட வென்று பேசினாலும், எல்லா விஷயத்தையும், தெள்ளத்தெளிவாக, தேங்காயை உடைத்தார் போல் சொல்லும் பழக்கம் என் மன்னிக்கு உண்டு. மனதில் இந்த எண்ணம் ஆழமாக பதிந்ததாலும், அதை பற்றி தீவிரமாக யோசிக்க சோம்பலாக இருந்ததாலும், இன்ஜினியரிங் திசையை நோக்கி பயணிக்க தொடங்கினேன்.

+2 ரிசல்ட் வெளியானவுடன் கட் ஆப் மார்க்கை வைத்து தோராயமாக கணித்து பார்த்ததில், என் செட்டில் ஒரு நான்கு, ஐந்து பேருக்கு ஒரே காலேஜில் சீட் கிடைக்கும் போல் இருந்தது. எனவே நான், ஜயேன், அருண், பால்ஸ் அனைவரும் செட் போட்டுக் கொண்டு ஷன்முகபுரத்தை தேர்ந்தெடுக்க ஆயத்தமானோம்.

நம்ம பய அருண் விசு மாதிரி, அவர் அனைத்து கல்யாண பிரச்சனைகள், குடும்ப உட்பூசல்கள் எல்லாத்திலும் புகுந்து ஒரு ச்ட்ராடெஜி போடுவதை போல், ஸ்கூல் பிரச்சனைகள் அனைத்திலும் ச்ட்ராடெஜி போடுவது தான் இவன் வேலை. அதிலும் முக்கால் வாசி நேரம் குழப்பத்தில் இருக்கும் பலரையும் தான் எடுத்த டெசிஷனை பின்பற்றுமாறு கன்வின்ஸ் செய்வதில் கெட்டிக்காரன். அதுபோல சமுக சேவையில் ஈடுபட்டு ஷன்முகபுரத்திற்கு வருவதற்கு அனைவரையும் ச்ட்ராங்காக கன்வின்ஸ் செய்த பெருமை இவனையே சாரும்.

ஜயேனும் நானும் டிடி தொச்த்துகள். ஹிந்தி வகுப்பு என்றாலே எங்களுக்கு அலர்ஜி அதுவும் ஸ்கூல் முடிந்தவுடன் வைவா வெர்சி கிளாஸ் என்றால் எதோ எங்கள வையரதுக்குன்னே வெச்ச கிளாஸ் மாதிரி இருக்கும், இந்த மாறி சிச்சுவேஷன்ல நாங்க எஸ்கேப் ஆயுடுவோம். 3:10 க்கு ஸ்கூல் விட்டவுடன் டிடி ரூம்க்கு போய் 5:30, 6 மணி வரை வேர்த்து கொட்ட கொட்ட விளையாடி தீர்ப்போம். டிரஸ் எல்லாம் நனைந்து வீட்டுக்கு கிளம்பும் பொழுது ஹிந்தி கிளாஸ் முடிந்து வரும் ஜிஇடம் பலமுறை மாட்டி இருக்கிறோம். அப்போதெல்லாம் தப தப வென்று ஓடிவிடவும் முடியாது, அதனால் இதுவரை போன ஜென்மத்தில் கூட பார்க்காதவரை போல் அவரை கண்டு கொள்ளாமல், அவர் கிழக்கே போனால் நாங்கள் மேற்கே எஸ்கேப் ஆகிவிடுவோம்.

பால்ஸ் ஐந்தாவதிலிருந்தே என்னுடன் சேர்ந்து படித்தவன். படிப்பில் படு சுட்டி என்றாலும் அப்போதெல்லாம் அடிமட்ட கஞ்சன். அவனோட ஓட்ட சைக்கிளை கிண்டல் செய்யாத ஆளே ஸ்கூலில் இல்லை. ஆனாலும் இதைஎல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டன். ஜாலியாக சிரித்த முகத்துடன் இருப்பான்.

இப்படி ஒரு படையாக ஷன்முகபுரத்தை அப்ரோச் ஆனோம். பீஸ் எல்லாம் கட்டிய பின் ஹச்டல் ரூம் சூஸ் பண்ண ஹாஸ்டலில் நுழைந்தோம். அப்போது ...

--> பயணம் தொடரும் ...

இனிமே எவ்வேரி Monday ஒரு பாகம் ரிலீஸ் ஆகும்.. அடுத்த Monday நான் அவுட் ஒப் ஸ்டேஷன் ராமேஸ்வரம் போறேன் அதுனால friday வே பாகத்த ரிலீஸ் பணிடறேன்..

Labels: , , ,

பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல் ...

இந்த பிள்ளையார் சதுர்த்திக்கு சுத்தி முத்தி இருக்கற பிள்ளையார் எல்லாரையும் பார்க்கலாம்னு புறப்பட்டோம், அப்போதான் தெரிஞ்சுது எங்க லோகாளிட்டியிலேயே அம்பது புள்ளையார் சிலைகளுக்கு மேல் வெச்சுருக்காங்கன்னு !! நாங்க பார்த்த புள்ளையார் சிலைகள் உங்கள் பார்வைக்கு ..