பாகம் 4
பாகம் 1 பாகம் 2 பாகம் 3
வெ.கூ -1
ஹாஸ்டல் வாழ்க்கை ஒரு புது அனுபவம் தான். அதுவும் சனி ஞாயர் விடுமுறை நாட்கள் எப்போதும் ஒரு சுவையான அனுபத்தையே தந்தன. பஸ்ட் இயர் என்பதால் ரேச்ற்றிக்ஷங்களும் அதிகம். காலேஜை விட்டு வெளியே போகனும்னாலே பெர்மிஷன் வாங்கனும். ஓரிரெண்டு சின்ன கடைகள் அருகிலேயே இருந்ததால் அத்யாவஸ்ய பொருட்கள் எல்லாம் அங்கேயே கிடைத்துவிடும். ஒரு ஒரு முறையும் தஞ்சாவுருக்கோ இல்லை திருச்சிக்கோ போகவேண்டும் என்றால் ஒரு நல்ல ரீசன் யோசிக்க வேண்டும். ஹேர் கட்டிங் என்றால் அருகில் உள்ள வல்லம் என்னும் கிராமத்திற்கு போக மட்டுமே பெர்மிஷன் கிடைக்கும், அதுவும் இரண்டு மணி நேரம் தான். செருப்பு வாங்கனும், டாக்டர பாக்கணும், அப்படி இப்படி இன்னு எதாவது ஒரு ரீசன் ரெடி பண்ணுவோம், இதுல கடி என்னன்னா நம்ம ஒரு ரீசன் மட்டும் யோசிச்சா போறாது, நம்ம செட்டுல இருக்கற எல்லாருக்கும் ஒரு ஒரு யுனீக் ரீசன் ரெடி பண்ணனும். அப்பறம் நம்ம செட்டுல இருக்கறவங்க எல்லாரும் அடுத்தடுத்து பெர்மிஷன் கேக்கக்கூடாது. ரெண்டு ரெண்டு பேரா பெர்மிஷன் வாங்கிட்டு கோயில்ல போய் வெய்ட் பண்ணனும். காலேஜுக்கு உள்ளேயே இருந்த அந்த கோயில் தான் எங்களுக்கு ஒரு பாதுகாப்பான பிளேஸ், பக்கத்துலையே ஆபீஸ் ரூம் இருந்ததுனால காத்து கருப்பு (செனியர்) அண்டாது.
இந்த மாதிரி ரீசன் கண்டுபிடிப்பது, ஸ்ட்ராடேஜி போடுவதுக்குன்னே நம்ம கிட்ட தான் ஒரு ஆயுதம் இருக்கே. அருணத்தான் சொல்றேன், கிடு கிடுன்னு ஒரு பிளானை போட்டு அதை சூப்பரா எக்சிக்யுட் செய்வது நம்ம ஆளின் தனித்தன்மை. ஒரு சில வாரங்களுக்கு மட்டுமே இந்த "வீக் எண்டில் வெளியே போகும் மாயை நீடித்தது" , படம் பார்ப்பதும், ஹோட்டலில் சாபிடுவதும் எத்தனை நாள் தாக்கு பிடிக்கும். அப்பறம் வீக் எண்டு என்றாலே ரிலாக்ஸ் என்று முடிவு செய்தோம். மதியம் 12 , 1 மணிக்கு பசி வயிற்றை சுண்டி இழுக்கும் வரை தூங்குவோம். எழுந்து பல் தேய்த்துவிட்டு நேராக சாப்பாடு தான். மதியத்தில் பொழுதை போக்க ரூமிலேயே டிடி ஆட ஆரம்பித்தோம். ஒரு ரூமுக்கென்று இருந்த மூன்று ரீடிங் டேபிள்களை போட்டு, பக்கத்து ரோமிலிரிந்து ஒரு டேபிள் இரவல் வாங்கி அதையும் சேர்த்து போட்டு, எவர் சில்வர் தம்பளர்களை அடுக்கி அதன் மேல் சுருட்டிய ஈடி சார்டுகளை ஒட்டி நெட் போல செய்து, நோட் புக்குகளை பெட்டாக வைத்து விளையாடுவோம். 4 , 5 மணிக்கு அன்றைக்கு ஊர் சுத்த போனவர்கள், மற்றும் உற்றார் உறவினரை பார்க்க போனவர்கள் எல்லோரும் ஹாஸ்டல் திரும்புவார்கள், அவர்கள் கொண்டுவரும் பட்சணங்களை மொக்கு மொக்கு என்று மொக்குவோம். சொச்ச நேரத்திற்கு அரட்டை, எங்கள் காலேஜ் ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால் வெ.கூ , வெட்டி கூட்டம். வெ.கூ க்களில் எல்லார் க்ளாஸ்ளையும் என்ன நடந்துது, ஹாஸ்டல் ஹாட் நியுஸ் இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், மெயின் மேட்டர் யாரையாவது ஒருத்தரை டார்கெட் செய்து கன்னா பின்னான்னு ஒட்டி தள்ளி அதில் அனைவரும் மனம் மகிழ்வதுதான். இப்படி ஒட்டு வந்குவதர்க்கென்றே வலிய வந்து மாட்டிக்கொள்ளும் ஆட்கள் பலர் ஹாஸ்டலில் இருந்தார்கள்.
இந்த பட்டியலில் முதல் இடம் பிடிப்பது "மேட்டர் ஸ்யாம்", இவனுக்கு எப்படி இந்த பேர் அமைந்தது என்று நினைவில்லை, ஆனால் பேரை பார்த்தால் கெஸ் செய்யும் படியாகத்தான் இருக்கிறது. வெள்ளை வெளேர் என்று உருண்டை கண்ணாடி போட்டுக்கொண்டு, கொழு கொழு வென்று இருப்பன். பார்வைக்கு அப்பாவி பாவம் என்று தொன்றினாலும், செய்யும் வேலையும் பேசும் பேச்சும் கொஞ்சம் டூ மச்சாகத்தான் இருக்கும். இவனுக்கும் இவன் ரூம் மேட் சுஜயிக்கும் என்னைக்கும் சண்டை தான். சுஜையும் லேசு பட்ட ஆளில்லை பெரிய இவன் மாரித்தான் பேசுவான். சுஜைக்கு நண்பர் பலம் அதிகம் இருந்ததால் அனைவரையும் அவன் ரூமுக்கு கூப்பிட்டு நம்ம மேட்டர் ஷ்யாமை கலாய்ப்பன். இவர்களுக்கு பயந்து ஷ்யாம் எங்களிடம் தஞ்சம் புக நாங்கள் அவனை ஆதரித்தோம். "டேய் அந்த சுஜை இனிக்கு என்ன படுத்திடாண்ட" என்று ஷ்யாம் எங்களிடம் வந்து சொல்ல நாங்களும் துற கஜ பதாதிகளுடன் அவன் ரூமுக்கு சென்று எங்கள் வேலையை காட்டுவோம், இதில் நன்மை என்னவென்றால் ஷ்யாம் எப்போதும் நொறுக்கு தீனி ஸ்டாக் வைத்திருப்பான், ஸோ சும்மாவே அவன் ரூமுக்கு போனா சுஜை சந்தேக பாடுவானே அதுனால நாங்க நொறுக்கு தீனி சாப்பட போராமதிரி போவோம். இந்த கேப்புல சுஜை கலாசல் தாங்க முடியாம எங்கள பிரெண்டு புடிக்க அவனோட ஸ்நாக்ஸ் மூட்டையும் பிரிச்சு தருவான். இதுல யார் கிட்ட எவ்வளோ இருக்குன்னு போட்டிவேறு. பூனை ஆப்பம் கதையா வயித்தையும் ரொப்பிக்கிட்டு கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிசுட்டும் வருவோம்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home