Sunday, July 16, 2006

மரணம்


பூக்கசக்கும் பூவுலகோர்

புருவங்கள் மேலுயர, சிறுமிகள் கண்சுருக்க
வயோதிகர் ஓரிருவர் நெற்றியில் கைப்பதிக்க
கல் நெஞ்சுக் காமுகர்கள் காளையனை பரிகசிக்க
தாயின் அலரல் சத்தம்

மூவேளை, தண்ணீரை சாப்பாடாய் நம்புபவர்
பசியாலே கசிவுற்ற ஆண்மகன்கள் இரு நால்வர்
தட்டினிலே சுகம்கான முடியாத காளையர்கள்
கட்டிலிலே சுகம்கான நினைப்பதுதான் பழக்கமன்றோ

காசுபணம் கையிலில்லை
தாய்க்கு, காதலிலே இன்பமில்லை
நள்ளிரவில் கிசு கிசுத்து
காதலுக்கு அழைப்பு விடும்
காதலனின் ஆசைத்தீயை அனைத்துவிட மனமுமில்லை

காமுகனின் துடிதுடிக்கும் கைகளில் அகப்பட்டு
ஈரைந்து மாதம் பின்னே வலிகளில் அவதிப்பட்டு
பெற்றெடுத்த பொட்டை ஒன்றின் தலையெழுத்தோ
ஓர் வரி தான்

"மரணம்"

நீ குடிக்கும் முதல் பாலில் நஞ்சு தெளித்தவன்
உன் தந்தையே அல்ல

பாலில் நஞ்சு கலந்தவன்
இறைவனே அல்ல...


இது தேன்கூடு கான்டெஸ்டுக்காக, அதுனால எல்லாம் ஓட்டு போடுங்க புன்னியமா போகும்...

Thursday, July 13, 2006

Hi folks,
We have come up with a new idea this time !!!
(me and my college mate)
After our college days atlast we could get hold
of some time, space and ppl to continue doing
our stupid things :))
Our hero (hope we can give him tht status) is
Goke
co-artists
Madhu (ukg) violet colour t-shirt
Senu (IV std) 49 sleeveless
Kamalesh (ukg) yellow sleeveless
Me :) black sleeveless

Do keep your speakers on!!



if this window is small visit this url

http://www.youtube.com/watch?v=vrD_GUl8QW8


if you have any problems viewing this in youtube.
You can download this zip file

http://www.uploading.com/?get=X5AV403B

We really enjoyed making this video. Hope you guys would also
have a great time watching it :)

Saturday, July 08, 2006

இயற்கை மடியில் இன்னொரு நாள்

இயற்கை தாயின் திருமுகத்தில்
கோடிக்கணக்கில் கொப்பளங்கள் !

தாகத்திற்கு பெட்ரொலை உன்னிடமே குடித்துவிட்டு - புயல்
வேகத்தில் விரைகின்ற வண்டிகளின் புகை கக்கல்

காதல் மந்திரம் ஜபிக்கும் வாலிபர்கள், வேள்வித்தீ
வளர்க்க வெளிவரும் விசேஷ விஷப் புகைகள்

அழகழகாய் காட்சி தரும் நட்சத்திர உணவகங்கள்
பரிசாக உன் நதியில் கலப்பதோ சாக்கடைகள்

மனிதன் செய்யும் இன்னல்களை மறந்திடும் மரக்கிளைகள்
வீட்டுக்கு வீடு எரிந்திடும் அனாதை விறகுகள்

ஓசோன் ஓட்டைக்கு
ஆயிரம் ஏரோசோல்கள்

பொன் பொருள் தேடி
உன்னை ஊடுருவும் ஊழியர்கள்

மண்வளம் பெறுக்க
உன்மேல் ஆயிரம் அமிலங்கள்

மலர் சொறியும் சோலைகளில்
மரணத்தின் அலறல்கள்

காரில் உல்லச உலாப்போக, சுடும்
தாரில் உன்னை நனைக்கும் மனிதயினம்

நாட்டுச் சண்டையில் உன் மார்துளைக்கும்
நாகரீக நாட்டு வெடிகுண்டு

அந்தோ ! இந்த பட்டியலில் இன்னும் ஆயிரம் சேர்க்கையுண்டு

உன் நீர் ததும்பும் கண்களை பார்க்க மனம் விரும்பவில்லை
கருகிய முகம் பார்த்து,
மை கலையும், என்று சொல்ல மனமுமில்லை

வானவில் சேலை கட்டிய உன் வண்ணப் புகைப் படத்தை
கருப்பு வெள்ளை 'புகைப்' படமாய் மாற்றியவர் மானுடரோ!

கொப்பளங்கள் சகித்துக் கொண்டய்
வெரும் கண்ணீருடன் நிறுத்திக் கொண்டாய்

உன் கண்ணீரின் கூட்டணிதான் கடல் என அழைத்தனரோ
அழுகைக் கடலின் மத்தியிலே உன் பரிவுக் கப்பல் மிதக்கிரதோ

நீ அன்றோ பொருமைக்கு ஏற்புடைய எடுத்துக்காட்டு
புத்தன், காந்தி, ஏசு வெல்லாம் ஏட்டோடு தூக்கிப் போடு

அங்கம் புழுதிபட குடம் குடமாய் குருதி கொட்டி
நிலம் நீர் பிளவடைய உன் ரெண்டு கால் பரப்பி

உணர்ச்சிக் குமுரல்கள் கோடிக் கணக்கினயும்
உயர் மலைச் சிதரல்களாய் - பூகம்பமாய் மாற்றிவிடு

நீ கட்டிப் போட்டிருக்கும் ஆழ்கடல்கள் அத்துனையும்
காட்டற்று வெள்ளமாய் நாட்டிற்குள் விரைந்திடட்டும்

கருனைப்பால் தெளிக்கும் உன் காவியக் கண்களெல்லாம்
கூத்தடிக்கும் கயவர்களின் செந்நீரால் சிவக்கட்டும்

உன் வேகத்தில் வெளியேறும் வெப்பக்காற்றின் வாயிலாக
கணக்கில்லா கட்டிடங்கள் பஞ்சாக பொசுக்கிப்போடு

உலகு தோன்றிய காலத்திற்கு தூக்கிச் செல் நீ என்னை
ஆதாமும் ஏவளுமாய் அமைதியில் திளைத்திருப்போம்

இரத்தப் பொட்டை உடனே அழித்துவிட்டு - உடையாய்
அமைதி கொடியை மாற்றிக்கொள் எனக்காக

உடலுள்ள கொப்பளங்கள் மொத்தமாய் அழித்துவிட்டு
எழில் மங்கை இயற்கையென என் உயிர்கலக்க
நேறுங்கி வாராய்

Sunday, July 02, 2006

அழகி...

பக்கத்தில் வாழ்ந்து வரும் உன் அழகு அறியாமல்
அழகு எங்கே என்று இன்று வரை அலைந்திருந்தேன்
ஆனால் உன்னை உற்று பார்த்த மருகணமே
என் அழகி நீதான் என அடிமனம் அலரிற்று
கண்களை மூடி உன் பக்கம் வந்து நின்றேன்
உன்னை தொட்டுக் குளிர்ந்த தோழி
என்னை கட்டிக் கொண்டாள்
இருக்கி அனைத்து என் காதுகளில் கிசுகிசுத்தாள்
உன் தோழியின் மொழி எனக்கு துளிக் கூட புறியவில்லை
புறியாத மொழி கேட்டு பதைபதைப்பில் கண்திறந்தேன்
பதுக்கி வைத்திருந்த அத்தனை முத்துக்களையும்
உடலில் பூட்டிக் கொண்டு ஓடிவரும் என் அழகி;
உன்னைக் கண்டேன்
என்னை பார்த்தவுடன் என்னடி அவ்வளவு சந்தோஷம்
உன் அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது
உன் தோழியின் வார்த்தைகளின் அர்த்தம் விளங்கிற்று
நமது சேர்க்கையில் பொறாமை அவளுக்குதனது
கோபக் கறங்களால் என்னை பின்னே தள்ளினாள்
உன்னுடன் சேர நான் நெஞ்சு நிமிர்த்தினேன்
நமது இடைவெளி குறைய குறைய
எங்கள் சண்டை மேலும் வலுத்தது
பெண்ணிடம் வீரம்காட்டா என் கொள்கைகள் அத்துனையும்
குப்பையில் தூக்கிப்போட்டு போர்க்களத்தில் குதித்தேன்
எட்டித் தொட்டு விடும் தூர்த்தில் நீ வந்தவுடன்
உன் தோழியை கீழே கிடற்றிவிட்டு
உன் மேல் பாய்ந்தேன்
நீயும் என்னை கட்டித் தழுவிக் கொண்டாய்
நம் உடல் பாகம் அத்துனையும் ஒருவருக்கொருவர்
தொட்டுணர்ந்தோம்
சாதித்துவிட்டேன் !!
இனி இவள் எனக்குத்தான்
முகத்தில் ஏளனச் சிரிப்புடன் உன் தோழியை பார்த்தேன்
சாதித்த என்னை பார்த்து ஏனோ அவள் சிரித்தாள்
அவள் சிரிப்பின் பொருளரிய உன்னை திரும்பிப் பார்த்தேன்
மனக்கும் முன்னறே மறைந்த மனமகள் போல
அறுக்கும் முன்னறே புயல் அறுத்த பயிர் போல
உன்னிடம் பேசும் முன்னறே
என்னை நீ கறைத்துப் போனாய்
உன் தோழியின் சிரிப்பு மேலும் வலுத்தது
எழுந்து நின்று நீ ஒட்டிச் சென்ற மன் துகள்கள் உதிர்த்தேன்
சுற்றிப் பார்த்தேன் இரண்டு நொடிக்கு முன்
நான் இருந்த நிலையில் உன்னுடன் இருவர் கீழே!!!
அலை அழகியே என்னை காப்பாற்ற முயன்ற்
உன் தோழி, காற்றுதான்
நிஜத்தில் அழகியோ

ps:- ர - ற மற்றும் ண - ன இடமாற்றம் எதாவது இருந்தா பிளிஸ் கண்டுகாதீங்க..
u see this is my ஸ்ஸ்டைலு.. :))

Saturday, July 01, 2006

எல்லாம் நான் தான்...

சாலையின் இருபுறமும் பச்சைபசும் புல்வெளிகள்
விடியலை பையில் பூட்டித் தூக்கிக்கொண்டு
முகத்தில் சிரிப்புடன் ஊர் நோக்கி நடந்தேன்

ஒரு இறங்கல் சேதி கேட்டு அதே சாலையில்
பஸ்ஸில் திறும்பும் போது வயல்களில் இருந்த
காய்ந்த புற்கள் மட்டும் என் கண்ணில் பட்டன

வயல் வயலல்ல, காய்ந்த புல்.
காய்ந்த புல், அதுவல்ல...
அனைத்தும் நான் தான் எனக்கு...
பெருமை

அழுக்கு போக அடித்து துவைக்கிறாளென்ற
பெருமை வீட்டுக் காரிக்கு
வேலைகாரிக்கு தானே தெரியும்; நிறம் மங்கிப்
போனால் தான் அது தன் மகனின்

தீபாவளி சட்டை என்று...