Saturday, July 08, 2006

இயற்கை மடியில் இன்னொரு நாள்

இயற்கை தாயின் திருமுகத்தில்
கோடிக்கணக்கில் கொப்பளங்கள் !

தாகத்திற்கு பெட்ரொலை உன்னிடமே குடித்துவிட்டு - புயல்
வேகத்தில் விரைகின்ற வண்டிகளின் புகை கக்கல்

காதல் மந்திரம் ஜபிக்கும் வாலிபர்கள், வேள்வித்தீ
வளர்க்க வெளிவரும் விசேஷ விஷப் புகைகள்

அழகழகாய் காட்சி தரும் நட்சத்திர உணவகங்கள்
பரிசாக உன் நதியில் கலப்பதோ சாக்கடைகள்

மனிதன் செய்யும் இன்னல்களை மறந்திடும் மரக்கிளைகள்
வீட்டுக்கு வீடு எரிந்திடும் அனாதை விறகுகள்

ஓசோன் ஓட்டைக்கு
ஆயிரம் ஏரோசோல்கள்

பொன் பொருள் தேடி
உன்னை ஊடுருவும் ஊழியர்கள்

மண்வளம் பெறுக்க
உன்மேல் ஆயிரம் அமிலங்கள்

மலர் சொறியும் சோலைகளில்
மரணத்தின் அலறல்கள்

காரில் உல்லச உலாப்போக, சுடும்
தாரில் உன்னை நனைக்கும் மனிதயினம்

நாட்டுச் சண்டையில் உன் மார்துளைக்கும்
நாகரீக நாட்டு வெடிகுண்டு

அந்தோ ! இந்த பட்டியலில் இன்னும் ஆயிரம் சேர்க்கையுண்டு

உன் நீர் ததும்பும் கண்களை பார்க்க மனம் விரும்பவில்லை
கருகிய முகம் பார்த்து,
மை கலையும், என்று சொல்ல மனமுமில்லை

வானவில் சேலை கட்டிய உன் வண்ணப் புகைப் படத்தை
கருப்பு வெள்ளை 'புகைப்' படமாய் மாற்றியவர் மானுடரோ!

கொப்பளங்கள் சகித்துக் கொண்டய்
வெரும் கண்ணீருடன் நிறுத்திக் கொண்டாய்

உன் கண்ணீரின் கூட்டணிதான் கடல் என அழைத்தனரோ
அழுகைக் கடலின் மத்தியிலே உன் பரிவுக் கப்பல் மிதக்கிரதோ

நீ அன்றோ பொருமைக்கு ஏற்புடைய எடுத்துக்காட்டு
புத்தன், காந்தி, ஏசு வெல்லாம் ஏட்டோடு தூக்கிப் போடு

அங்கம் புழுதிபட குடம் குடமாய் குருதி கொட்டி
நிலம் நீர் பிளவடைய உன் ரெண்டு கால் பரப்பி

உணர்ச்சிக் குமுரல்கள் கோடிக் கணக்கினயும்
உயர் மலைச் சிதரல்களாய் - பூகம்பமாய் மாற்றிவிடு

நீ கட்டிப் போட்டிருக்கும் ஆழ்கடல்கள் அத்துனையும்
காட்டற்று வெள்ளமாய் நாட்டிற்குள் விரைந்திடட்டும்

கருனைப்பால் தெளிக்கும் உன் காவியக் கண்களெல்லாம்
கூத்தடிக்கும் கயவர்களின் செந்நீரால் சிவக்கட்டும்

உன் வேகத்தில் வெளியேறும் வெப்பக்காற்றின் வாயிலாக
கணக்கில்லா கட்டிடங்கள் பஞ்சாக பொசுக்கிப்போடு

உலகு தோன்றிய காலத்திற்கு தூக்கிச் செல் நீ என்னை
ஆதாமும் ஏவளுமாய் அமைதியில் திளைத்திருப்போம்

இரத்தப் பொட்டை உடனே அழித்துவிட்டு - உடையாய்
அமைதி கொடியை மாற்றிக்கொள் எனக்காக

உடலுள்ள கொப்பளங்கள் மொத்தமாய் அழித்துவிட்டு
எழில் மங்கை இயற்கையென என் உயிர்கலக்க
நேறுங்கி வாராய்

1 Comments:

Blogger Yesgee said...

"nilame poru nilame, un porumai vendru viduvaen"... "porumai", bhoomi'oda oru characteristic'a, appadinu naan romba yosichu irukaen, ippo konjam puriyudhu...

9:28 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home