அடிமுதல் முடிவரை கருப்பில் நனைந்த திரை
உச்சந்தலை மேலிருந்து, கால் அடி பதித்த இடம் வரை
ஒரே நிறத்தில் தோய்ந்து வித்யசம் இழந்த பல
பொருட்கள் என் கண் முன்
அலைகள் கேட்டேன்
மணல் உணர்ந்தேன்
மீன்கள் முகர்ந்தேன்
உப்பு காற்று ருசித்தேன்
என் நாலு புலன்கள் மட்டும் தான்
அவை இருப்பதை உணர்ந்தன
ஆறடியில் இருந்த என் கண்கள்
இரண்டடிக்கு வந்தன (உட்கார்ந்தேன்)
கண் விரித்துப் பார்த்தேன் திரையில் ஒரு கிழுசல்
இயற்கையின் கருப்புக் கையில்
செம்மஞ்சள் ரேகை ஒன்று
வடக்கிலிருந்து தெற்காய் வளரத் தொடங்கிற்று
வெளிச்சத்தை உள்ளடக்கிய மேக கும்பல்கள்
மேலும் கருப்பாய் தோன்றின எனக்கு
அவள் அனிந்த கருப்புப் புடவையில் இன்றும்
இளஞ்சிவப்பு ஜரிகை தான் ஆனால் அதே புடவை அல்ல
இன்று யானை, புலி, பொம்மை, அறுவி, வாள்
என வித்யாசமான பல நூறு வறை படங்கள்
கண் சிமிட்டிப் பார்த்தால், அதே இடத்தில் வேறு படம்
வெள்ளி ஜரிகையில் அவள் ஆடை பின்ன உள்ளிருந்து வந்தான்
என் நண்பன் சூரியன்
நேர தாமதத்துக்கு திட்டு வாங்க பயந்து கொண்டு
மேகத்தின் பின்னிருந்து ஒரு கண்ணால் எட்டிப் பார்த்தான்
வா வா பரவாயில்லை என்று நான் சொன்னவுடன் தான்
கம்பீர நடை போட்டு
மேகம் கலைத்து முன்னே வந்தான் :)